அடுத்த 48 மணிநேரம்... பிரித்தானியாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நாட்டின் பெரும்பாலான பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை அலுவலகம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது

அடுத்த 48 மணி நேரத்தில் 100 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்று அரசு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கை: வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், ஒரு சில வீடுகள் மற்றும் வணிகங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அநேகமாக பாதிக்கப்படும், சாலைகளில் வெள்ளம் தேங்கும் என்பதால் பயண நேரங்களை அதிகமாக்கும்.

சனிக்கிழமை வரை ஒரே இரவில் வடகிழக்கு மத்திய ஸ்காட்லாந்தை நோக்கி நகர்வதற்கு முன்பு வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை தென்மேற்கு ஸ்காட்லாந்தில் கடும் மற்றும் தொடர்ச்சியான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில பகுதிகளில் 20-40 மிமீ என பரவலாக மழை பெய்யும், உயரமுள்ள நிலப்பரப்பில் 50-80 மிமீ மழை பொழிய சாத்தியம் மற்றும் மேற்கு மலைகள் மீது சுமார் 100 மிமீ மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனிக்கிழமை பிற்பகலில் கிழக்கு நோக்கி மழை பெய்யும்.

கனமழை என்பது ஒரு பெரிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகும், இது நாளை முதல் ஸ்காட்லாந்து முழுவதும் பரவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வால் சனிக்கிழமை காலை முதல் பிற்பகல் 3 மணி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்