நிர்வாண நிலையில் அங்கு சென்றேன்.. அவள் மதுபோதையில் தூங்கி கொண்டிருந்தாள்.. குற்றவாளியின் வாக்குமூலம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் மது போதையில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை நிர்வாண நிலையில் இருந்த நபர் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Kent கவுண்டியை சேர்ந்தவர் ஷேன் பால்ட்வின் (31). இவர் கடந்த 2017 மே மாதம் இரவு மதுவிடுதிக்கு சென்று மது அருந்தினார்.

அங்கு இளம்பெண் ஒருவரும் மது அருந்திய நிலையில் இருவரும் பேசி நண்பர்கள் ஆனார்கள்.

இதையடுத்து இரவு வெகு நேரமாகிவிட்டதால் தனது வீட்டில் வந்து பாதுகாப்பாக தங்கும்படி ஷேன் அப்பெண்ணிடம் கூற அவரும் நம்பி சென்றார்.

பின்னர் அப்பெண் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த போது தன் முன்னால் நிர்வாண நிலையில் இருந்த ஷேன் தன்னை பலாத்காரம் செய்தார் என அவர் குற்றஞ்சாட்டினார்.

திடீரென அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுந்த போது தன் மீது ஷேன் படுத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான புகாரையடுத்து பொலிசார் ஷேனை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதில், தான் அப்பெண்ணை பலாத்காரம் செய்யவில்லை என்றும் அவர் மேல் வெறுமனே படுத்திருந்ததாகவும் ஷேன் கூறினார்.

இதன்பின்னர் எடுக்கப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் ஷேன் மீது தவறிருப்பது தெரிந்தது.

இதை தொடர்ந்து அப்பெண் சம்மதத்துடன் அவருடன் உறவு கொண்டதாக ஷேன் கூறினார்.

ஆனால் அடுத்தக்கட்ட விசாரணையில் மீண்டும் மாற்றி பேசினார் ஷேன். தான் வேண்டுமென்றே தவறாக நடந்து கொண்டதாகவும் இந்த விடயம் தன் காதலிக்கு தெரிந்தால் அவர் தன்னை விட்டு பிரிந்துவிடுவாள் என பயந்தே இப்படி பொய் சொன்னதாகவும் கூறினார்.

இதனிடையில் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், நான் ஷேனுடன் மதுபான விடுதியில் நெருக்கமாக நடனம் எல்லாம் ஆடவில்லை, மேலும் அவர் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை,

நான் மதுபோதையில் இருந்தாலும் அவருடன் உறவு கொள்ள சம்மதிக்கவில்லை என கூறியுள்ளார்.

ஷேன் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்