பிரித்தானிய ராணியின் முதன்மை மருத்துவருக்கு சிக்கல்: அவர் கேட்ட ஒற்றைக் கேள்வியால் பணியில் இருந்து நீக்கம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய ராணியார் மற்றும் முக்கிய அரச குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ சேவையாற்றி வந்த மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தாம் பணியாற்றும் மருத்துவமனையில் உள்ள வேற்றுமத நம்பிக்கை கொண்டவர்களை அவர் அவதூறு பேசியதாக கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை அன்று பணி நேரத்தில் சிறப்பு அனுமதியுடன் சென்றவர்களை கேள்வி கேட்பதாக கருதி, எது உங்களுக்கு முக்கியம், நோயாளிகளா? அல்லது உங்கள் மத நம்பிக்கையா என வினவியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை அமைப்பு முன்னால் விளக்கமளித்த 70 வயதான மருத்துவர் Zygmunt Krukowski, தமது குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார்.

ஆனால் அவருக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டிய விசாரணை அமைப்பு, கடந்த 2015 ஆம் ஆண்டு அவரை அவர் பணியாற்றிய மருத்துவமனையில் இருந்து நீக்கியுள்ளது.

தற்போது அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட மருத்துவர் Zygmunt Krukowski, தம்மை பணி நீக்கம் செய்தது முறையற்றது என தெரிவித்துள்ளார்.

தேவையற்ற எந்த கருத்தையும் தாம் வெளியிடவில்லை எனவும், ஆனால் அவர்கள் புரியும்படி தாம் விளக்கமளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்போதைய சூழலில் தாம் கொஞ்சம் கோபமாக பேசியதாகவும், ஆனால் உடனையே மன்னிப்பு கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்