லண்டனில் திருமாவளவனை அவமதித்தவர் யார், ஏன்? நடந்த உண்மையை விளக்கிய விசிக

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா தலைநகர் லண்டனில் விடுதலை சிறுத்தைக்ள கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக அக்கட்சியின் துணை பொதுச் செயலர் ஆளூர் ஷாநவாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

நேர்காணில் ஒன்றில், லண்டன் சம்பவம் குறித்து கேட்டக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளூர் ஷாநவாஸ், லண்டனில் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது, அதில் முரண்பாடு இருந்த ஒருவர் எழுந்து அவரது உணர்ச்சியை வெளிப்படுத்தி கத்தியுள்ளார்.

கத்திவிட்டு அந்த நிகழ்ச்சியுடைய துண்டறிக்கையை கிழித்து வீசுகிறார். பின்னர், அங்கிருந்தவர்கள் அவரை அப்புறப்படுத்தி வெளியேற்றியுள்ளனர்.

வெளியேற்றப்பட்டவர் பிரச்னையில் ஈடுபட்ட அந்த நபர் தானே தவிர திருமாவளவன் அல்ல. அப்போது கூட அவரை வெளியேற்ற வேண்டாம், அரங்கத்திலே அமர வையுங்கள், அவருக்கு கேள்வி இருந்தால் அதற்கு விளக்கம் அளிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று தான் திருமாவளவன் கூறினார்.

Related image

ஆனால், அங்கிருந்த தோழர்கள் அதற்கு உடன்படாததாலும். குறித்த நபர் தொடர்ந்து கூச்சலிட்டதால் அவர் அப்புறப்படுத்தப்பட்டார். இதனையடுத்து அந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

குறித்த நிகழ்வை மட்டும் பதிவு செய்து, அவர் துண்டறிக்கையை வீசி எறிந்ததை, பணத்தை வீசி எறிந்ததாக தவறான தகவல்கள் பரவியது என விளக்கமளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்