பொது இடத்தில் முத்தம் கொடுத்து கொண்ட பெண் ஓரினிச்சேர்க்கையாளர்கள்! அதனால் எதிர்கொண்ட விளைவு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிரபல உணவகத்தில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் முத்தம் கொடுத்து கொண்டதற்கு ஏளனம் செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nottingham நகரை சேர்ந்தவர் அலிஸ் போவர்மென் (31) இளம்பெண்ணான இவரும் டெரி-அன் மெட்கால்ப் (34) என்பவரும் ஓரினச்சேரிக்கையாளர்கள் ஆவர்.

இரண்டு வருடங்களாக இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இரவில் இருவரும் சேர்ந்து வெளியில் சென்றனர்.

அப்போது அதிகாலை 3.30 மணியளவில் பிரபல உணவகத்தில் அலிஸும், மெட்கால்பும் இருந்த போது ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து கொண்டனர்.

இதை பார்த்த உணவக ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இங்கு குடும்பமாக பலர் வந்துள்ளனர், இப்படியெல்லாம் இங்கு செய்யக்கூடாது என கூறினர்.

இதை கேட்டு அதிருப்தியடைந்த இருவரும், ஒரு ஆணும் பெண்ணும் முத்தம் கொடுத்து கொண்டால் இப்படி சொல்வீர்களா என கேட்டனர்.

அதற்கு ஊழியர்கள், அது சாதாரண விடயம் என்பதால் அதை பெரிது படுத்தமாட்டோம் என கூறினார்கள்.

இதையடுத்து தங்களிடம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் ஊழியர்கள் நடந்து கொண்டதாக அலிஸும், மெட்கால்பும் பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், மோசமான செயலில் நாங்கள் எதுவும் ஈடுபடவில்லை, சாதாரணமாக எல்லா தம்பதியும் கொடுத்து கொள்வது போல முத்தம் தான் கொடுத்து கொண்டோம்.

ஆனால் ஊழியர்கள் எங்களிடம் வெறுப்பை காட்டினார்கள் என கூறியுள்ளனர்.

பொலிசார் கூறுகையில், இது தொடர்பாக புகார் வந்துள்ள நிலையில் விசாரித்து வருகிறோம்.

பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததற்கு நன்றி, நிச்சயம் அவர்களுக்கு எங்களின் ஆதரவு இருக்கும் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்