இணையத்தில் கசிந்த இளவரசி டயானாவின் தடை செய்யப்பட்ட புகைப்படங்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இணையத்தில் இருந்து நீக்கப்பட்ட இளவரசி டயானாவின் விபத்து தொடர்பாக கோர புகைப்படங்களில் சில தற்போது அவரது நினைவு நாளில் மீண்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள சுரங்கப் பாதையில் கடந்த 1997 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ஆம் திகதி இளவரசி டயானா சாலை விபத்தில் கொல்லப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பான நெஞ்சைப் பிசையும் புகைப்படங்கள் அப்போது இணையத்தில் பரவலாக உலகமெங்கிலும் உள்ள மக்களால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வந்தது.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர், இணையத்தில், டயானா மரணம் தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் தொழில்நுட்ப உதவியுடன் நீக்கப்பட்டது.

டயானா மரணமடைந்து 22 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தற்போது விஷமிகளால் அவரது இறுதி நேர புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Image: GETTY

பல புகைப்படங்களும் மிகவும் கோரமாகவும், பார்ப்பவர்களின் நெஞ்சைப் பிசையும் வகையிலும் அமைந்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று, சர்வதேச பத்திரிகைகள், அந்த புகைப்படங்களை போட்டி போட்டு பிரசுரித்தன. பிரான்சில் ஒரு பத்திரிகை அதே ஆண்டு செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் பக்க புகைப்படமாகவும் பிரசுரித்தது.

9 ஆண்டுகளுக்கு பின்னர் இத்தாலிய பத்திரிகை ஒன்று, ,அதுவரை வெளியாகாத டயானாவின் விபத்து தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு, பலரது கோபத்திற்கும் இரையானது.

Image: GETTY

கருப்பு வெள்ளையில் அமைந்த அந்த புகைப்படத்தில், குற்றுயிராக கிடக்கும் டயானாவுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுவது பதிவாகியிருந்தது.

உலக வரலாற்றில் முதன்முறை என வெளியிடப்பட்ட அந்த புகைப்படமானது ஒட்டுமொத்த மக்களின் கோபத்தை மட்டுமே சம்பாதித்தது.

இதனையடுத்து எழுந்த கோரிக்கையை தொடர்ந்து இணையத்தில் பரவிக்கிடக்கும், டயானாவின் கோர காட்சிகள் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Image: GETTY
Image: GETTY
Image: Daily Star

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்