அறுவை சிகிச்சை முறையில் எடுக்கப்பட்ட குழந்தை: வெளியே வந்ததும் தாயின் நெஞ்சில் போட்ட குட்டி தூக்கம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை முறையில் பெண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில், அந்த குழந்தை இரண்டு வித்தியாசமான விடயங்களைச் செய்தது.

எஸ்ஸெக்சைச் சேர்ந்த Charlotte Knowles (31), தனது மகள் Lylaவை அறுவை சிகிச்சை முறையில் பிரசவிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும்போது, குட்டிக் குழந்தை Lyla தானாகவே வயிற்றிலிருந்து வெளியேறுவதைக் காணலாம். இது 'natural' C-section என்று அழைக்கப்படுகிறது.

அதாவது மருத்துவர்கள் குழந்தையை முழுமையாக வெளியே எடுப்பதற்கு பதில், குழந்தையின் தலை வெளியில் வந்ததும் அதை சுத்தம் செய்து விட்டு விடுகின்றனர். குழந்தை தானாகவே நகர்ந்து வெளியே வருகிறது.

Lylaவைப் பொருத்த வரை, தானாக நகர்ந்து வெளியே வரும் அவள், அம்மாவின் நெஞ்சுப் பகுதிக்கு வந்ததும், அப்படியே நிம்மதியாக தூங்கி விடுகிறாள்.

அப்புறம் மருத்துவர்கள் அவளை தட்டித்தான் எழுப்பினார்களாம். இந்த 'natural' C-section முறை இப்போது பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதாம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்