பிரித்தானியாவில் இசைக்கலைஞரை குத்திக்கொலை செய்த இந்தியர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் முன்னாள் ரக்பி விளையாட்டு வீரரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளி நபர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

தென்மேற்கு லண்டனில் முன்னாள் ரக்பி வீரரும், இசையில் அதிக ஆர்வம் கொண்டவருமான 69 வயது ஆலன் இசிச்சே, கடந்த 24ம் திகதி மாலை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் கொடுத்த தகவலின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த குர்ஜீத் சிங் லால் (35) என்பவரை வெள்ளிக்கிழமையன்று பொலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிசாரை அணுகுமாறு விசாரணை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ராஜ் க்ரோவர் என்பவர் கூறுகையில், பஞ்சாபில் இருந்து ஏராளமான இந்திய குடியேறியவர்கள் வசிக்கும் புறநகர்ப் பகுதியான சவுத்தாலில், என்னுடைய வீட்டின் காலில் பெல் அடிக்கப்பட்டது.

நான் கதவை திறந்ததும் ஆலன் உடல் முழுவதும் இரத்தத்துடன் தரையில் சரிந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் இரத்தத்தை துடைப்பதற்காக துணி எடுக்க சென்றேன். உடனே என்னுடைய மனைவி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

ஆனால் அவர்கள் வருவதற்குள்ளாகவே அவர் உயிரிழந்துவிட்டார். அந்த சமயத்தில் என்னுடைய பிறந்தநாள் விழாவிற்காக நாங்கள் வெளியில் கிளம்பிக்கொண்டிருந்தோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்