பிரித்தானியாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் இளவரசர் ஹரி... நண்பர்கள் அச்சம்

Report Print Basu in பிரித்தானியா

இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே தம்பதி லாஸ் ஏஞ்சல்ஸுக்கு இடம் பெயரப் போகிறார்கள் என்று ஹரியின் நண்பர்கள் அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.

இளவரசர் ஹரி-மேகன் தம்பதி தற்போது Windsor Castle-ரில் உள்ள உள்ள Frogmore Cottage வசித்து வருகின்றனர். இந்நியைில், Herefordshire-ல் உள்ள சொத்துகளை எடுத்துக்கொள்ளுமாறு இளவரசர் சார்லஸின் நிபந்தனையை ஹரி நிராகரித்துள்ளார்.

Welsh Borders எல்லைகளுக்கு அருகே ஹரிக்கு சார்லஸ் நிலம் ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரது இரண்டாவது மகன் ஹரி அதில் சிறிதும் அக்கறை காட்டவில்லை என்றும், இப்போது அவர் வெளிநாடு செல்லப் போவதாக நண்பர்கள் அஞ்சுகிறார்கள்.

மேகனின் சொந்த நகரமான Los Angeles-க்கு ஹரி குடும்பத்துடன் இடம்பெயர சாத்தியம் இருப்பதாக நட்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன், இளவரசர் ஹரி-மேகன் தம்பதிகளிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் ஹரி இடம்பெயர போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 Meghan and Harry are allegedly planning to quit the UK

இளவரசர் ஹரி-மேகன் தம்பதி Los Angeles-க்குச் செல்ல வேண்டுமானால், அவர்கள் நிச்சயமாக மேகன் தாய் டோரியா ராக்லாண்டிற்கு அருகில் இருப்பார்கள், ஆனால் ஜார்ஜ் குளூனி போன்ற மேகனின் ஹாலிவுட் நண்பர்கள் இருப்பதால், அவர்கள் வீட்டிற்கு அருகே இடம்பெயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 The Royal couple are currently living in Frogmore Cottage in the grounds of Windsor Castle

வெளியான இத்தகவல் குறித்து Kensington அரண்மனை செய்தித் தொடர்பாளரை அணுகியபோது, இது குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

 Meghan Markle's Former Los Angeles Home

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்