இரண்டு பெண்களை கொன்று சாப்பிட்ட இளைஞர்: பிரித்தானியாவில் தற்போது சமையல் கலைஞர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் அதிக பாதுகாப்பு கொண்ட மருத்துவமனையாக கருதப்படும் Broadmoor-ல், இரண்டு கொலை செய்து, அவர்களின் உடலை சாப்பிட்டவருக்கு சமையல் கலைஞர் பொறுப்பு வழங்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் இரண்டு கொலை செய்த குற்றத்திற்காக 21 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருபவர், தற்போது 46 வயதாகும் கிரஹாம் ஃபிஷர்.

உளவியல் காரணமாகவே இவர் கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், தற்போது ஃபிஷர், பிரித்தானியாவின் அதிக பாதுகாப்பு கொண்ட Broadmoor உளவியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையிலேயே ஃபிஷர் தொடர்பில் அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தமது நண்பர் ஒருவருக்கு அவர் எழுதிய பதிவில்,

எனக்கு சமையல் என்றால் கொள்ளை பிரியம். தற்போது நான் விதவிதமாக சமைக்கிறேன் என விலாவாரியாக அதில் விவரித்துள்ளார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு ஹேஸ்டிங்ஸ் பகுதியில் தமது அண்டை வீட்டில் குடியிருக்கும் 40 வயதான Clare Letchford என்பவரை ஃபிஷர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

Broadmoor Entrance

பின்னர் அவரது கைகளில் ஒன்றை வெட்டி நீக்கி அதை சமைத்து சாப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் நடந்து 8 தினங்களுக்கு பின்னர் 75 வயதான Beryl O’Connor என்பவர் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த இரு கொலைகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் கிரஹாம் ஃபிஷர் என்பவரை கைது செய்தது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், உளவியல் ரீதியான பாதிப்பு காரணமாகவே இந்த கொலைகளை செய்துள்ளதும், சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஃபிஷர், பின்னர் Broadmoor உளவியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் அதே மருத்துவமனையில் சமையல் பொறுப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Broadmoor உளவியல் மருத்துவமனையில் ஏற்கெனவே இரு ஸ்பானிய மாணவர்களை ஃபிஷர் கத்தியால் தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்