இளம் திருநங்கையிடம் மிக மோசமாக நடந்து கொண்ட பிரித்தானிய இளம் பெண்.. பின்னர் அவருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் சமுக ஆர்வலராக உள்ள திருநங்கையை மோசமாக விமர்சித்த பெண் அவரின் குழந்தைகள் முன்னால் கைது செய்யப்பட்டு தரதரவென இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

கேட் ஸ்காட்டோ (38) என்ற பெண் சில மாதத்துக்கு முன்னர் சமுக ஆர்வலராக உள்ள ஸ்டெப்னி ஹைடன் என்ற திருநங்கையை சமுகவலைதளத்தில் ஆண் என கிண்டல் செய்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் கேட்-டை பொலிசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்டெப்னியை அவர் கிண்டலாக விமர்சினம் செய்தது உறுதியானது.

இதையடுத்து பொலிசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர், கேட் வரும் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அவர் கூறுகையில், என் வீட்டுக்கு மூன்று அதிகாரிகள் வந்தார்கள். பின் என்னுடைய 10 வயது ஆட்டிசம் பாதித்த மகள் மற்றும் 20 மாத குழந்தை முன்னால் என்னை கைது செய்தார்கள்.

பின்னர் என்னை தரதரவென இழுத்து சென்று சிறையில் அடைத்தார்கள், அங்கு சுகாதாரமாகவே இல்லை.

இது குறித்து கூறியும் பொலிசார் காதில் போட்டு கொள்ளவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்