ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானியரின் இறுதி ஆசை: வெளியான உருக்கமான தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொன்ற பிரித்தானியர், இறுதி ஆசையாக தமது பிள்ளைகளை கட்டி அணைத்துக் கொள்ள விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியரும் சமூக ஆர்வலருமான டேவிட் ஹைன்ஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிரியாவில் வைத்து கடத்தப்பட்டார்.

இவர் ஜிஹாதி ஜான் என அறியப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதியால் செப்டம்பர் 2014 ஆம் ஆண்டு கழுத்து துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில், அவர் தமது விடுதலைக்காக 100 மில்லியன் பவுண்டுகள் தொகையை சேகரிக்க கூறி அவரது பெற்றோருக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடிதம் எழுத கட்டாயப்படுத்தப்பட்டார்.

அதில், எனது பிள்ளைகளை ஒருமுறையேனும் காண வேண்டும் என்ற ஆவலே இந்த கடிதம் எழுத என்னைத் தூண்டியுள்ளது.

எனது பிள்ளைகளை பார்த்து அவர்களை கட்டி அணைக்கும் வாய்ப்பு இனி அமையுமா என தெரியவில்லை.

Credit: Rex Features

இனிமேலும் அவர்களை பிரிந்திருக்க என்னால் முடியாது என அந்த நீண்ட கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

44 வயதான டேவிட் ஹைன்ஸ் துருக்கி எல்லையில் அகதிகளுக்கு உதவும் பொருட்டு பணியாற்றி வந்துள்ளார்.

இந்த வேளையிலேயே ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். டேவிட் ஹைன்ஸ் அந்த உருக்கமான கடிதம் எழுதும் போது, பிரித்தானிய ஜிஹாதிகளான அலெக்ஸாண்டா கோட்டே மற்றும் எல் ஷாஃபி எல்ஷேக் ஆகிய இருவரும் காவல் காத்துள்ளனர்.

தற்போது அந்த இருவரும் பிரித்தானியாவில் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். கடந்த 2018 ஆண்டு ஜனவரி மாதம் இந்த இருவரும் சிரியா ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான டேவிட் ஹைன்ஸை கொன்றது ஜிஹாதி ஜான் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்