இளவரசரை சுற்றும் பாலியல் குற்றசாட்டுகள்....பெரும் கவலையில் மகாராணி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் இளவரசர் ஆண்ட்ரூ இணைத்து பேசப்படுவதால் மகாராணி பெரும் கவலையிலும், ஒருவிதமான மனஅழுத்தத்திலும் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இளம்பெண்கள், குழந்தைகள் என பலரையும் பாலியல் குற்றத்தில் ஈடுபட வைத்ததாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு, சிறையில் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்.

அவருடைய நெருங்கிய நண்பரான பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவும், சிறுமிகளுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக பகீர் கிளப்பும் குற்றசாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அரண்மனை நிர்வாகமும், இளவரசரும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இளவரசர் குறித்து வெளியாகி கொண்டிருக்கும் செய்திகளால் மகாராணி பெரும் கவலையிலும், மனஅழுத்தத்திலும் இருப்பதாக, ராணியின் நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று யார்க்கில் நடந்த திருமண விழாவில் இளவரசர் கலந்து கொள்ளவில்லை. மாறாக அவரது மகள்கள் இளவரசி பீட்ரைஸ், யூஜின் மற்றும் முன்னாள் மனைவி சாரா பெர்குசன் ஆகியோர் மட்டும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்