விமானிகள் பற்றாக்குறையால் தாமதமான விமானம்: களத்தில் இறங்கி விமானத்தை இயக்கிய பயணி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மான்செஸ்டரிலிருந்து ஸ்பெயினுக்கு புறப்படவேண்டிய விமானம் ஒன்று விமானிகள் பற்றாக்குறையால் தாமதமாவதை அறிந்த ஒரு பயணி, தானே விமானத்தை இயக்க முன்வந்தார்.

விமான ஊழியர்கள் பற்றாக்குறையால் மான்செஸ்டரிலிருந்து புறப்பட வேண்டிய பல விமானங்கள் தாமதமாகின.

மான்செஸ்டரிலிருந்து ஸ்பெயினுக்கு புறப்படவேண்டிய விமானத்தில் இருந்த பயணிகளுக்கு, விமானத்தை இயக்கவேண்டிய விமானிகளில் ஒருவர் வராததால் விமானம் இரண்டு மணி நேரம் தாமதாமகும் என அறிவிக்கப்பட்டதால், அவர்கள் சோர்வடைந்தனர். அந்த நேரத்தில் ஒரு பயணி எழுந்து மைக்கை பிடித்தார்.

அவர், நானும் எனது குடும்பமும் விடுமுறைக்காக ஸ்பெயினுக்கு செல்கிறோம். அதற்காக விமான நிலையத்திற்குள் வரும்போது, விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

என் மனைவி வேறு, நமது விமானம் தாமதமாகிறதாம் என்று கூறி என் பின் மண்டையில் குத்தி விட்டாள்.

எனவே நாம் ஏன் ஒரு போன் செய்யக்கூடாது என்று நினைத்தேன். உடனடியாக விமான நிறுவனத்திற்கு போன் செய்து, நான் ஸ்பெயின் செல்வதற்காக புறப்பட்டேன், விமானி பற்றாக்குறையால் விமானம் தாமதமாகிறது என்று கேள்விப்பட்டேன்.

என்னிடம் விமானிக்கான ஓட்டுநர் உரிமமும், அடையாள அட்டையும் உள்ளன, நான் வேண்டுமானால் அந்த விமானத்தை ஓட்டிச் செல்லட்டுமா என்று கேட்டேன். பதிலளிப்பதாக கூறி அவர்கள் போனை வைத்துவிட்டார்கள். சரியாக எட்டே வினாடிகளில் எனது போன் ஒலித்தது.

எடுத்தால், தயவு செய்து விமானத்தை ஓட்டிச் செல்லுங்கள், மிக்க நன்றி, என்றார்கள் விமான நிலைய அதிகாரிகள்.

உங்களுடைய விமானிகளில் ஒருவர் இன்று சீருடையில் இல்லாமல், சாதாரண உடையில் விமானத்தை இயக்குவது உங்களுக்கு பிரச்னையில்லை என்றால் நாம் புறப்படலாம் என்று அவர் கூற, மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததோடு, கரவொலியும் எழுப்பினார்கள். அந்த பயணியின் பெயர் Michael Bradley.

அவர் EasyJet விமான நிறுவனத்தில் விமானியாக பணி புரிபவர். விடுமுறையில் குடும்பத்துடன் அவர் ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்லும்போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

விமானம் தாமதாகிறது என்பதை அறிந்தும் எப்படியும் நேரத்திற்கு ஸ்பெயினுக்கு சென்றே தீரவேண்டும் என்று முடிவெடுத்தார் Michael, (இல்லையென்றால் மனைவியிடம் அடி வாங்கவேண்டும் என்ற பயம் வேறு).

விமானத்தில் அமர்ந்திருந்த Michelle Potts என்ற பெண் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

விமான நிறுவன அதிகாரிகள் Michaelக்கு பாராட்டுகளையும், தங்கள் நன்றியையும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்