பிரித்தானியா கோடீஸ்வரரை மனைவியே தீர்த்து கட்டியது அம்பலம்! அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கோடீஸ்வரர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரை மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொன்றது தெரியவந்துள்ளது.

Hertfordshire-ஐ சேர்ந்தவர் வில்லியம் டெய்லர். மிக பெரிய கோடீஸ்வரரான இவர் கடந்தாண்டு யூன் மாதம் 3ஆம் திகதி வீட்டிலிருந்து மாயமானார்.

இந்நிலையில் எட்டு மாதம் கழித்து வில்லியமின் சடலம் அங்குள்ள ஒரு ஆற்றின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக பொலிசார் வில்லியமின் மனைவி ஏஞ்சிலா (53) மற்றும் அவர் காதலன் பவுல் கேனன் (54) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் மீதான நீதிமன்ற விசாரணை சமீபத்தில் நடந்தது. அப்போது ஏஞ்சிலாவும் பவுலும் சேர்ந்து வில்லியமை கொலை செய்தததாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதை இருவரும் மறுத்துள்ளனர், நீதிமன்ற கூற்றின்படி கடந்த 1997ஆம் ஆண்டு வில்லியம் இரண்டாவதாக ஏஞ்சிலாவை திருமணம் செய்து கொண்டார்.

தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், இந்நிலையில் தான் பவுலுடன் ஏஞ்சிலாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து கணவரிடம் தனக்கு விவாகரத்து வேண்டும் என ஏஞ்சிலா கோரினார்.

ஆனால் வில்லியம் திட்டவட்டமாக விவாகரத்து கொடுக்க முடியாது என கூறியதோடு அவருக்கு அதிகளவில் தன் சொத்துக்களை எழுதி வைத்தார்.

ஆனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என ஏஞ்சிலா தொடர்ந்து அடம்பிடித்த நிலையில் பவுலுடனான அவர் தொடர்பை வில்லியம் கண்டுபிடித்துள்ளார்.

இதையடுத்து கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய ஏஞ்சலா திட்டமிட்டார். இதன்பின்னர் கிரிபிரித் (60) என்பவரை வைத்து வில்லியமை தீர்த்து கட்ட ஏஞ்சலாவும், பவுலும் முடிவெடுத்தனர்.

இந்த சூழலில் வில்லியம் காணாமல் போவதற்கு ஒரு வாரம் முன்பு அவரின் விலையுயர்ந்த கார் தீப்பிடித்து எரிந்தது.

காரில் இருந்த ஒரு துணியின் மூலம் டிஎன்ஏ பரிசோதனை செய்த பொலிசார் காரை எரித்தது பவுல் தான் என கண்டுபிடித்தனர்.

இது குறித்த விசாரணையின் இடையில் தான் வில்லியம் மாயமாகி பின்னர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

ஆனால் கொலை செய்ததை மூவரும் மறுத்துள்ள நிலையில் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்