லண்டன் விமானநிலையத்தில் நடிகர் ரஜினி மருமகனுக்கு ஏற்பட்ட நிலை... வெளியான முழுத் தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரபல திரைப்பட நடிகரான ரஜினியின் மருமகனும், சவுந்தர்யா ரஜினிகாந்தின் கணவருமான விசாகனின் கடவுச் சீட்டு மற்றும் பணம் திருடுபோயுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

இவர் விசாகன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். விசாகன் வெளிநாட்டிலும் தொழில் செய்து வருகிறார்.

இதனால் அவர் அடிக்கடி வெளிநாடு செல்வது வழக்கம்.

இந்நிலையில் சவுந்தர்யா ரஜினியும் விசாகனும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றாக லண்டன் சென்றுள்ளனர். இவர்கள் லண்டனின் ஹீத்ரு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.

அப்போது அங்கு விசாகன் தன்னுடைய கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) மற்றும் அமெரிக்க டொலர்கள் வைத்திருந்த பேக்-கை பார்த்த போது, அது காணமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனால் அவர் உடனடியாக விமானநிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்த ஹோட்டலில் தங்கினர். இது குறித்து உடனடியாக இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரஜினிகாந்த்தின் மகள் மற்றும் மருமகள் என்று தெரிந்ததால், உடனடியாக டூப்ளிகேட் கடவுச்சீட்டு வழங்கப்பட்டது.

அவரது கடவுச்சீட்டு மற்றும் அமெரிக்க டாலரை திருடியது யார் என்பது குறித்து அங்கிருக்கும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்