முன்னாள் போதைப்பொருள் கடத்தல்காரர்களை வேலைக்கு அமர்த்த பிரித்தானியாவுக்கு ஒரு ஆலோசனை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

முன்னாள் போதைப்பொருள் கடத்தல்காரர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என பிரித்தானியாவுக்கு ஒரு வித்தியாசமான ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது! இந்த ஆலோசனையைக் கொடுத்தது அமெரிக்கா!

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற இருப்பதையொட்டி, கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது குறித்த விவாதங்கள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பிரித்தானியா கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமானால், முன்னாள் போதை மருந்து கடத்தல்காரர்களை பணிக்கமர்த்தி அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் சட்டப்பூர்வ கஞ்சாவை உருவாக்குவதற்கு பயிற்சியளிக்கவேண்டும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் Massachusettsஇல் சட்டப்பூர்வ கஞ்சா வியாபாரத்துக்கு பொறுப்பான ஆணையரான Shaleen Title, தனது மாகாணத்தின் முன்மாதிரியைப் பின்பற்றி பிரித்தானியாவும், முன்பு சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களாக இருந்தவர்களை பணிக்கமர்த்தவேண்டும் என்றார்.

தற்போது Massachusettsஇல் 150 முன்னாள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள Shaleen, இல்லினாயிசிலும், கலிபோர்னியாவிலும்கூட இந்த திட்டம் முயற்சி செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்