கணவனுக்கு DNA கிட் பரிசளித்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கணவனுக்கு DNA கிட் பரிசளித்த மனைவிக்கு, தனது கணவன் தனக்கு அண்ணன் முறை என்று தெரியவர அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்துள்ள நிலையில், தனது கணவனுக்கு DNA கிட் ஒன்றை பரிசளித்தார் அவரது மனைவி.

ஆனால், பரிசோதனையின் முடிவுகள் அவர்களது வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டன.

ஆம், அந்த பெண்ணின் கணவன், அவருக்கு அண்ணன் முறை என்பதைக் காட்டியது அவர்களது பரிசோதனை முடிவுகள். இடி விழுந்தது போல் இருந்தது இருவருக்கும்.

ஆளுக்கொரு அறையில் தூங்க தொடங்கிவிட்டார்கள் கணவனும் மனைவியும்! இந்த பிரச்னை அவர்களது மகனையும் பாதிக்கத் தொடங்கியிருகிறது. இது போதாதென்று வேறு ஒரு பிரச்னையும் வெடித்துள்ளது.

அது, தனது மாமனார் அவரது மனைவிக்கு துரோகம் செய்திருக்கலாம், அதனால்தான் இந்த பிரச்னை என அந்த பெண் நம்பத் தொடங்கிவிட்டதுதான்.

மொத்தத்தில் அவர்களது குடும்பம் சர்வ குழப்பத்தில் இருக்கிறது.

எப்படி மீண்டும் இணைந்து வாழ்வது என இணையத்தில் அவர் ஆலோசனை கேட்க, முக்கியமாக, DNA பரிசோதனைகளை தேவையில்லாமல் செய்துகொள்ளாதீர்கள் என்று அறிவுரை கூறியுள்ளார் ஒருவர்!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்