லண்டன் விமானநிலையத்தில் நடந்தது என்ன? அதிர்ச்சி தகவலை கூறிய நடிகர் ரஜினி மகள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரபல திரைப்பட நடிகரான ரஜினின் மருமகன் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக செய்தி வெளியான நிலையில், தற்போது அதைப் பற்றி செளந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

இவர் விசாகன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். விசாகன் வெளிநாட்டிலும் தொழில் செய்து வருகிறார்.

இதனால் தொழில் விஷயமாக செளந்தர்யா மற்றும் விசாகன் லண்டன் சென்ற போது, அங்கு விசாகனின் பாஸ்போர்ட் திருடிவிட்டதாக செய்தி வெளியானது.

இந்நிலையில் இது குறித்து செளந்தர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், முதல் வரியிலே சர்வதேச விமானநிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்று ஆரம்பித்துள்ளார்.

தொடர்ந்து, கடந்த 01.09.2019-ஆம் திகதியன்று லண்டனின் ஹாத்ரோ சர்வதேச விமானநிலையத்தில் எங்களுடைய லக்கேஜ் திருடப்பட்டுவிட்டது.

இதனால் இது குறித்து உடனடியாக புகார் கொடுக்கப்பட்டது. அதன் பின் இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அன்றைய நாள் விமானநிலையத்தில் சிசிடிவி காமெராக்கள் பதிவு செய்யவில்லை என்று கூறினர்.

இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது ஒரு சரியான பதிலா? என்ற ஆதங்கம் எழும்பியது. கணவரின் மிகவும் விலையுயர்ந்த பாஸ்போர்ட் தொலைத்துள்ளோம், ஆனால் வந்த பதில், இது தான் சர்வதேச விமானநிலையத்தில் பயணிகளுக்கு இருக்கும் பாதுகாப்பா என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்