திருமணத்திற்கு வந்தவரிடம் காதலை தெரிவித்த மணப் பெண்... அதன் பின் என்ன நடந்ததது தெரியுமா? வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் தனக்கு திருமணம் நடப்பது போன்று தயார் செய்த பெண் ஒருவர், திருமணத்திற்கு வந்த நபரிடம் காதலை தெரிவித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வேல்ஸ் பகுதியில் இருக்கும் Bargoed-விலே இந்த திருமணம் நடந்துள்ளது. Aleasha Pilawa என்ற பெண் தனக்கு திருமணம் என்று உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துள்ளார்.

இவர் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தானவர் என்று கூறப்படுகிறது,

இந்நிலையில் இந்த திருமணத்திற்கு அனைவரும் வந்திருந்த போது, மணப் பெண் உடையில் வந்த Aleasha Pilawa அங்கிருந்த Paul Schoproni(40) என்பவரிடம், திடீரென்று உனக்கு என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என்று கேட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு, இல்லை என்று சொல்லிவிட்டு, அதன் பின் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.

(Image: Aleasha Pilawa)

இந்த வீடியோவை அங்கு திருமணத்திற்கு வந்த உறவினர்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த திருமணம் குறித்து Aleasha Pilawa ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 30 முறையாவது Paul Schoproni தன்னிடம் காதலை தெரிவித்தார்.

அப்போது நான் HR-க்கான படிப்பை படித்துக் கொண்டிருந்தேன். அதுமட்டுமின்றி நான் ஏற்கனவே திருமணமானவள் என்பதால் யோசிக்க வேண்டியிருந்தது.

அதன் பின் ஒரு முடிவை எடுத்து, இது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று இப்படி செய்ததாக கூறியுள்ளார்.

(Image: Aleasha Pilawa)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers