மகாராணியாருக்கு மிகவும் பிடித்த பேரப்பிள்ளை ஹரி என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லையாம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பொதுவாக எல்லோரும் பிரித்தானிய மகாராணியாருக்கு பிடித்த பேரப்பிள்ளை இளவரசர் ஹரி என்றுதான் நினைப்பதுண்டு. ஆனால் தற்போதைக்கு வேறொரு பேரக்குழந்தை அந்த இடத்தைப் பிடித்திருக்கிறதாம். இளவரசர் எட்வர்ட், இளவரசி சோபியின் மகளான Lady Louise Windsor (15) தானாம் அவர்.

அரியணை ஏறும் வரிசையில் 13ஆவது நபரான Louise, அரசியல் மற்றும் ராஜ குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலிலிருந்து வெளிவர மகாராணியாருக்கு உதவியுள்ளார்.

Louise, அவரது தம்பி James மற்றும் அவர்களது பெற்றோர் மகாராணியாருடன் விடுமுறையில் நேரம் செலவிட்டுள்ளனர்.

அப்போது Louise மகாராணியாருடன் குறிப்பிடத்தக்க அளவு நேரம் செலவிட்டுள்ளார். இருவரும் இணைந்து குதிரையேற்றம் கூட மேற்கொண்டுள்ளார்கள்.

பால்மோரல் எஸ்டேட்டில் Louiseம் Jamesம் நேரம் செலவிட்டதை மகாராணியார் மிகவும் விரும்பியதாகவும், குறிப்பாக Louiseஉடன் அவர் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும், அதனால் தற்போது Louiseதான் மகாராணியாருக்கு மிகவும் பிடித்த பேரக்குழந்தையாகி இருப்பதாகவும், அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

Louiseஐ அடுத்து மகாராணியாருக்கு Jamesஐ மிகவும் பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Louise படம் வரைவதில் ஆர்வமுடையவர் என்பதால், பால்மோரல் எஸ்டேட்டில் வைக்கப்பட்டுள்ள அபூர்வ படங்கள் சிலவற்றை மகாராணியார் அவருக்கு காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers