மகளை கொலை செய்த குற்றவாளியை சந்திப்பதற்காக 1500 மைல் பயணம் செய்த தந்தை!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஆபத்தான உணவு மாத்திரைகளை கொடுத்து மகளை கொலை செய்த குற்றவாளியை சந்திப்பதற்காக ஒரு பாசக்கார தந்தை 1500 மைல்கள் பயணம் செய்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த டக் ஷிப்ஸி என்பவரின் மகள் பெத், ஆபத்தான உணவு மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் கடந்த 2017ம் ஆண்டு பரிதமாக உயிரிழந்தார். தன்னுடைய மகளுக்கு நீதி கேட்டு போராடிய தந்தை இரண்டு வருடத்திற்கு பின்னர் வழக்கில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் தன்னுடைய மகளுக்கு அந்த மாத்திரைகளை அனுப்பி வைத்த ஷெபெலெவ் (31) என்பவரை சந்திப்பதற்காக இங்கிலாந்திலிருந்து 1500மைல்கள் தாண்டி உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்.

ஷெபெலெவை சந்தித்த அவர், ‘நீங்கள் என் மகளின் கண்களைப் பார்த்து, அவளைக் கொன்ற மாத்திரைகளை விற்றதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.’ எனக்கூறியுள்ளார்.

அதற்கு அந்த நபர், என்னை மன்னித்துவிடுங்கள். கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி செய்தேன். நான் அழவில்லை. ஆனால் வருந்துகிறேன். உங்கள் மகள் இறந்துவிடுவாள் என்பது எனக்கு தெரிந்திருந்தால், நான் அவளுக்கு அந்த மாத்திரைகளை அனுப்பியிருக்க மாட்டேன்.

பெத்தை கொன்ற கொடிய ரசாயனத்தை பதப்படுத்தி, காப்ஸ்யூல்களில் போட்டு டிவிடி உறைகளில் மறைத்து 2017 இல் இங்கிலாந்துக்கு அனுப்பியதாக அவர் கூறினார்.

மேலும், பெத்தின் தாய் கரோலிடமும் தனிப்பட்ட விதத்தில் மன்னிப்பு கோரினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers