லண்டனில் 10-வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 6 வயது சிறுவன் தற்போது எப்படி இருக்கிறான்: தாயாரே வெளியிட்ட தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் உள்ள பிரபல கலை அருங்காட்சியகத்தின் 10-வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 6 வயது பிரஞ்சு சிறுவனின் நிலை குறித்து அவரது தாயார் உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் அளித்த தகவலில், மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து தற்போது சிறுவன் மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களின் கோரிக்கையை ஏற்று, சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியை திரட்டித் தந்த அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் 4 ஆம் திகதி மத்திய லண்டனில் அமைந்துள்ள Tate Modern அருங்காட்சியகத்தின் 10-வது மாடியில் இருந்து, 17 வயது இளைஞரால் பிரஞ்சு சிறுவன் தூக்கி வீசப்பட்டான்.

இந்த விவகாரம் தொடர்பாக குறித்த 17 வயது நபர் மீது கொலை முயற்சிக்கு வழக்குப் பதிந்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10-வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன், அதிர்ஷ்டவசமாக 5-வது மாடியில் உள்ள சமதளமான பகுதியில் இருந்து குற்றுயிராக மீட்கப்பட்டான்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவனுக்கு நீண்ட நேரம் கொண்டதும், மிகவும் சிக்கலான இரு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

குடும்ப சூழலை கருத்தில் கொண்ட அந்த பிரஞ்சு குடும்பம் விடுத்த கோரிக்கையை ஏற்று, சிறுவனின் சிகிச்சைக்காக மொத்தம் 54,000 பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டது.

தற்போது சிறுவனின் உடல் நிலையில் நல்ல மாறுதல் ஏற்பட்டுள்ளதாக கூறும், அவனது பெற்றோர், உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

அவனால் தற்போது பேசவோ, உடலை அசைக்கவோ முடியாது என்றாலும், தங்களின் நடவடிக்கைகளை அவனால் புரிந்து கொள்ள முடிகிறது என்பது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று 10-வது மாடியில் தாயாரின் கையில் இருந்து பறித்து செல்லப்பட்ட சிறுவன், பின்னர் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டான்.

இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 17 வயது நபர், அடுத்த ஆண்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்