லண்டன் நான்கு மாடி குடியிருப்பை கபளீகரம் செய்த தீ: போராடும் தீயணைப்பு படையினர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனிலுள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில், மொத்த வீடும் தீக்கிரையாகியுள்ளது.

தென்மேற்கு லண்டனின் Worcester Park பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்று தீப்பற்றி எரிவதாக தீயணைப்பு படையினருக்கு அதிகாலை 1.30 மணியளவில் தகவல் கிடைத்துள்ளது.

20 தீயணைப்பு இயந்திரங்களும், 125 தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த தீயை அணைப்பது பெரும் சவாலாக உள்ளது என்றும், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள் என்றும் Station Manager Graham Adams கூறியுள்ளார்.

அந்த நான்கு மாடி குடியிருப்பு தீப்பற்றியபோது அங்கு யாரேனும் இருந்தார்களா என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலையில், இதுவரை யாரும் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது ஆறுதலை அளிப்பதாக உள்ளது.

எதனால் தீப்பற்றியது என்பது குறித்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers