பிரான்ஸ் சிறையில் உணவில்லாமல் 2 நாட்கள் அடைக்கப்பட்டிருந்த பிரித்தானிய தம்பதி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரான்ஸ் நாட்டில் உணவில்லாமல் இரண்டு நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருந்ததாக பிரித்தானிய தம்பதியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த சாம் ஹெமிங்வே (23) மற்றும் ஜோர்டான் வாலண்டைன் (20) என்கிற தம்பதியினர் தங்களுடைய நிச்சயதார்த்தத்தை கொண்டாட பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

அங்கு சில நாட்களை கழித்த பின்னர் மீண்டும் இங்கிலாந்திற்கு திரும்பியுள்ளனர். அப்போது வழக்கமான சோதனையில் ஈடுபட்ட குடிவரவு அதிகாரிகள் ஈரானைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அவர்களுடைய காரின் மேல் பகுதியில் மறைந்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இரண்டரை நாட்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து கூறியுள்ள தம்பதியினர், அந்த சிறுவன் சாமான்களுக்கு அடியில் மறைந்திருந்ததே தங்களுக்கு தெரியாது. தவறுதலாக நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். இரண்டு நாட்களாக எங்களுக்கு எந்த உணவும் வழங்கப்படவில்லை.

ஜோர்டான் தன்னை தானே தாக்கிக்கொண்ட போது கூட அவர்கள் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களை நடத்திய விதம் மிகவும் அருவுருப்பானது என குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers