லண்டனில் கோடிக்கணக்கில் சொத்து வாங்கிய விவகாரம்.. பிரியங்கா காந்தியின் கணவர் விவகாரத்தில் நீதிமன்றம் ஒத்திவைப்பு

Report Print Santhan in பிரித்தானியா

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா, லண்டனில் 18 கோடி ரூபாயில் சொத்துகளை வாங்கினார்.

இது, சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக வதேரா, அவருடைய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

வதேராவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரியும், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரியும் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் வதேராவின் நெருங்கிய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், இருவரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் முன்ஜாமீன் வழங்கியது. அப்போது நீதிமன்றம் அவரிடம், முன் அனுமதி பெற்றே, வெளிநாடு செல்ல வேண்டும் என நிபந்தனை விதித்தது.

இதையடுத்து, டெல்லி நீதிமன்றத்தின் அனுமதிகோரி ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்தார். முன் ஜாமீன் பெற்ற பிறகு 2-வது முறையாக ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி ராபர்ட் வதேரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 12-ஆம் திகதிக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதற்கு முன், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக 6 வார காலம் சென்று திரும்ப ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் அனுமதியளித்தது. லண்டனில் வதேரா சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதால், அங்கு செல்ல மட்டும் அவருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers