லண்டனில் காதலியை கொன்று நிர்வாண உடலை புதைத்துவிட்டு வெளிநாடு தப்பிய இளைஞர்: அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் குடியிருக்கும் முன்னாள் பிரஞ்சு ஊடக பிரபலத்தை கொன்று அவரது நிர்வாண உடலை புதைத்துவிட்டு வெளிநாடு தப்பிய இளைஞர் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தென் மேற்கு லண்டன் புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து 34 வயதான லாரலைன் கார்சியா-பெர்டாக்ஸ் என்பவரின் நிர்வாண சடலம் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 32 வயதான கிரில் பெலோருசோவ் என்பவரை எஸ்டோனியா நாட்டில் வைத்து, சம்பவம் நடந்த 6 நாட்களுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளதுடன், விசாரணைக்காக பிரித்தானியாவுக்கும் பொலிசார் அழைத்து வந்தனர்.

ஆனால் இந்த கொலை தொடர்பில் தமக்கு எந்த பங்கும் இல்லை என வாதிட்ட பெலோருசோவ், தாம் மரணமடைந்த லாரலைன் கார்சியாவிடம் இருந்து பல மாதங்களுக்கு முன்னரே விலகி விட்டதாகவும்,

அவரிடம் இருந்து பெற்ற பணத்தை திருப்பித் தர உறுதி அளித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே டி.என்.ஏ சோதனையில் கொலை நடந்தபோது சம்பவயிடத்தில் பெலோருசோவ் இருந்துள்ளது உறுதியானது.

லாரலைன் கார்சியாவின் உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக குப்பைகளை சேகரிக்கும் பை ஒன்றில் திணித்து, புதைக்கப்பட்டிருந்தது.

மட்டுமின்றி சம்பவத்தன்று அவரது மொபைலில் இருந்து நண்பர்களுக்கு அனுப்பப்பட்ட குறுந்தகவல்களே இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.

மேலும், அதுவே லாரலைன் கார்சியாவின் சடலத்தை பொலிசாரால் கைப்பற்ற காரணமாகவும் அமைந்துள்ளது.

லாரலைன் கார்சியாவின் கடன்களை தாம் திரும்ப செலுத்துவதாக அவரிடம் பொய் கூறி வந்த பெலோருசோவ், குடியிருப்பு ஒன்றையும் அவருக்காக பார்த்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பெலோருசோவ் கொலை செய்த பின்னர், கார்சியாவின் மொபைலில் இருந்து நண்பர்களுக்கு அனுப்பிய குறுந்தகவலில், தமக்கு கிடைத்த பணத்தை தாம் எவ்வாறு செலவு செய்யப் போகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதுவே அந்த குறுந்தகவல்கள் மீது கார்சியாவின் நண்பர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்