தவறான தொழில் மோகம்.. குழந்தைகளை கொன்ற தாய்: சொர்க்கத்தில் உள்ள பிஞ்சுகளுக்கு தந்தையின் உருக வைக்கும் கடிதம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் தாயால் கொல்லப்பட்ட இரண்டு பிஞ்சுகளுக்கு தந்தை உருக வைக்கும் வகையில் பிறந்தநாள் அஞ்சலி கடிதம் எழுதி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தவறான தொழில் செய்து வந்த 23 வயதான Louise Porton, தனது இரண்டு பெண் குழந்தைகள் அதற்கு இடையூறாக இருந்ததால் அவர்களை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். 3 வயதான Lexi Draper, 16 மாதமான Scarlett Vaughan இருவரும் தாயால் படுகொலை செய்யப்பட்டனர்.

குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக Louise Porton-க்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. 2018 ஜனவரி மாதம் கொல்லப்பட்ட குழந்தைகளை கடந்த வாரம் அடக்கம் செய்ய தந்தை Draper அனுமதிக்கப்பட்டார்.

கொல்லப்பட்ட தனது மகள் Scarlett-ன் 3வது பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் வகையில் தந்தை Draper கடிதம் ஒன்றை எழுதி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

(Image: PA)

அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவதையே, அப்பா பின்னர் உங்களை வந்து பார்க்கிறேன். அப்பாவின் பெரிய மகளே நீ இல்லாமல் நான் வாடுகிறேன்.

சொர்க்கத்தில் உங்களுக்கு பிரம்மாண்டமான விருந்து அளிக்கப்படும் என நான் நம்புகிறேன். நான் உங்களை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறேன். நாங்கள் அனைவரும் நீங்கள் இல்லாமல் வாடுகிறோம்.

(Image: Facebook)

இந்த கடிதம் உங்களை அடையும் என்று நம்புகிறேன், என் செல்ல குட்டிகளே, நான் எப்போதும் உங்களை நேசிப்பேன் என உருக்கத்துடன் எழுதியுள்ளார் Draper.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers