லண்டனில் பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்.. கமெராவில் சிக்கிய திகில் காட்சி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பட்டப்பகலில் 20 பேர் கொண்ட கும்பல் தாக்கிக் கொண்ட வீடியோ தற்போது வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.

தலைநகரான லண்டனின் Croydon பகுதியில் கடந்த 3-ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் அங்கிருக்கும் வீதியில் சுமார் 20 பேர் கொண கும்பல்(இளைஞர்கள்) கையில் அபாயமான ஆயுதங்களான இரும்பான் ஆன பைப்புகள், கத்திகள் போன்றவற்றை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த வீடியோவைக் அங்கிருந்த படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அப்போதே பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிசார் அங்கு வருவதற்குள், அந்த கும்பல் தப்பியுள்ளது.

பொலிசார் அங்கு வந்து மேற்கொண்ட விசாரணையில், ஒரு கத்தி மட்டும் அங்கு கிடந்துள்ளது. இதனால் யாருக்கு காயம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை எனவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் வீதியில் இப்படி பயங்கர ஆயுதங்களுடன், இந்த கும்பல் சண்டை போட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...