100 பவுண்டுகள் அபராதத்திற்காக 30,000 பவுண்டுகள் செலவிட்ட பிரித்தானியர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தியதற்காக 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்ட நபர், சட்ட போராட்டத்திற்காக தமது வாழ்நாள் சேமிப்பையே செலவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Worcester பகுதியில் குடியிருக்கும் 71 வயதான ரிச்சர்ட் கீட்வெல் என்பவரே 100 பவுண்டுகள் அபராதம் செலுத்த முடியாது என சட்ட போராட்டம் நடத்தி சுமார் 30,000 பவுண்டுகளை செலவிட்டவர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மணிக்கு 30mph மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கும் சாலையில் இவர் 35mph வேகத்தில் சென்றுள்ளார்.

இதனால் 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டார். இந்த தொகையை செலுத்தமுடியாது என மேல்முறையீடு செய்த கீட்வெல், இறுதியில் 3 ஆண்டுகள் நடந்த இந்த சட்ட போராட்டத்தில் தமது மொத்த சேமிப்பையும் செலவிட வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளார்.

இந்த வழக்கிற்காக சுமார் 21,000 பவுண்டுகள் வழக்குரைஞர் கட்டணமாக செலுத்தியுள்ளார் கீட்வெல். நீதிமன்ற செலவினங்கள் என 7,000 பவுண்டுகள் செலவாகியுள்ளது. மட்டுமின்றி போக்குவரத்து செலவுகள்.

தமது வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே நான்கு முறை நீதிமன்றம் செல்ல வேண்டி வந்தது என்கிறார் கீட்வெல்.

தமது குடும்பத்தார் பயன்படுத்த வேண்டிய இந்த தொகை தற்போது சட்ட போராட்டத்தால் வீணானதில் தமக்கு குற்ற உணர்வு இருப்பதாக கீட்வெல் தெரிவித்துள்ளார்.

நீதி கிடைக்கும் என்று இறுதி வரை போராடியதாக கூறும் கீட்வெல், ஆனால் தமக்கு தோல்வியே மிஞிசியது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்