பட்டப்பகலில் பலபேர் கண் முன்னே லண்டனில் நடந்த திகில் சம்பவம்: பகீர் கிளப்பும் காணொளி காட்சிகள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் இளைஞர் கும்பலிடம் இருந்து இளம்பெண் ஒருவரை காப்பாற்றியதற்காக பட்டப்பகலில் பலபேர் கண் முன்னே 17 வயது நபர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பான எட்வேர் சாலையில் நேற்று மதிய உணவு வேளையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

17 வயதேயான Youssef Karim என்ற சிறுவனே இளைஞர் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்.

லண்டனில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 105 பேர் கத்தி மற்றும் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர்.

கடந்த 9 நாட்களில் மட்டும் லண்டனில் கொல்லப்படும் 7-வது நபர் கரீம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரியில் தொழிலியல் பயின்றுவந்த கரீம், சம்பவத்தன்று உடல் முழுவதும் வாள் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கமெராவில் சிக்கிய காட்சிகளில், பலர் கண் முன்னே இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.

குற்றுயிராக மீட்கப்பட்ட கரீம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் ஐந்தரை மணி நேரத்திற்கு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நண்பர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவிக்கயில், இளைஞர் கும்பல் ஒன்றிடம் இருந்து தம்மை கரீம் காப்பாற்றியதாகவும், அதனாலையே அவர் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கலாம் என கருதூவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்