பெண்ணிடமிருந்து கைப்பையை பறித்த நபர், வீசியெறியப்பட்ட பெண்மணி: திடுக்கிட வைக்கும் ஒரு வீடியோ!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் நடந்து சென்று கொண்டிருந்த வயதான ஒரு பெண்ணிடமிருந்து மர்ம நபர் ஒருவர் அவரது கைப்பையை பறித்துச் செல்ல, இழுத்த வேகத்தில் அந்த பெண்மணி பயங்கரமாக விழும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Northamptonshireஇலுள்ள தெரு ஒன்றில் வயதான பெண்மணி ஒருவர் கையில் ஒரு கைப்பையுடன் சாவகாசமாக நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார் தனக்கு இப்படி ஒரு பிரச்னை குடியிருப்பு பகுதியிலேயே வரும் என அவர் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

வெளியாகியுள்ள CCTV கமெரா காட்சிகளில் அந்த பெண் நிதானமாக நடந்து சென்று கொண்டிருக்க, திடீரென மர்ம நபர் ஒருவர் அவரது கைப்பையை பிடித்து இழுப்பதைக்காண முடிகிறது.

அவர் தனது கைப்பையை பலமாக பிடித்துக் கொண்டிருப்பார் போலும், அந்த நபர் பிடித்து வேகமாக இழுத்ததில் அந்தரத்தில் பறந்து கீழே விழுகிறார் அந்த பெண்மணி.

கீழே விழுந்ததில் அவர் பிடியை விட, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பையை தூக்கிக்கொண்டு ஓடுகிறார் அந்த நபர்.

கீழே விழுந்ததில் அந்த பெண்மணிக்கு கை உடைந்து விட்டிருக்கிறது. CCTV கமெரா காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிசார் அவற்றின் அடிப்படையில் அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை கைது செய்த பொலிசார், விசாரித்தபின் அவர்களை ஜாமீனில் விட்டுள்ளார்கள். விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்