26 நாட்களில் 13 பெண்களை கர்ப்பமாக்கியதாக பெருமையடித்துக்கொள்ளும் பிரித்தானியர்: ஏற்கனவே 800 பிள்ளைகளுக்கு அப்பாவாம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியர் ஒருவர், தான் இருபத்தாறே நாட்களில் 13 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளதாக பெருமையடித்துக்கொண்டுள்ளார்.

Bedfordshireஐச் சேர்ந்த Simon Watson (45), சமீபத்தில் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த இடுகை ஒன்றில், 26 நாட்களில் 13 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள், மேலும் 16 பேர் கர்ப்பமாக இருக்கிறார்கள்.

பிறந்த குழந்தைகளில், 19ம் 20ம் இரட்டைக் குழந்தைகள் என்று தெரிவித்திருந்தார். இவர் என்ன மந்திரவாதியா 26 நாட்களில் 13 பிள்ளைகளுக்கு தந்தையாவதற்கு, அல்லது playboy-யா, 16 பேரை கர்ப்பமாக்குவதற்கு என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள்! Simon உயிரணு தானம் செய்யும் ஒருவர்.

பிரித்தானியாவின் முன்னணி உயிரணு தானம் செய்பவர் என்று கூட அவரைக் கூறலாம். விவாகரத்து பெற்ற Simon, 16 ஆண்டுகளில் 800 குழந்தைகளுக்கு தந்தையானதாக 2016ஆம் ஆண்டு ஜம்பமடித்துக்கொண்டபோது கவனம் ஈர்த்தார்.

ஒரு குறிப்பிடத்தக்க விடயம், குழந்தையில்லாத எத்தனையோ தம்பதிகள், குழந்தைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்யும்போது, Simon உயிரணு தானத்திற்காக வெறும் 50 பவுண்டுகள்தான் வாங்குகிறார்!

தனக்கு 800 குழந்தைகள் என்று பெருமையடித்துக்கொள்ளும் Simon, தான் உயிரணு தானம் கொடுத்ததின் மூலம் பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானோரை இதுவரை சந்தித்ததில்லை.

அவருக்கு முன்னாள் மனைவிகள் இருவர் மூலம் பிறந்த மூன்று குழந்தைகளை மட்டும் வளர்த்து வருகிறார் Simon.

தனது உயிரணு தானத்தால் பிறந்த குழந்தைகளை சந்திக்க தான் எப்போதுமே விரும்புவதாக Simon தெரிவித்தாலும், இதுவரை அவரை எந்த குழந்தையுமே சந்தித்ததில்லையாம், அவர்கள் தன்னை சந்திக்க விரும்பினால் அதை வரவேற்பதாக தெரிவிக்கிறார் Simon.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்