பல ஆண்டுகளாக நிற்காத விக்கல்: இளம்பெண்ணுக்கு காத்திருந்த மாபெரும் அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு இளம்பெண்ணுக்கு விக்கல் ஏற்பட்டுக்கொண்டேயிருந்த நிலையில், மருத்துவ பரிசோதனையில் ஒரு எலுமிச்சம் பழ அளவிற்கு மூளையில் அவருக்கு புற்றுநோய்க்கட்டி இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள் மருத்துவர்கள்.

பிரித்தானியாவின் Coventryயைச் சேர்ந்த Lucy Wood (29)க்கு தொடர்ந்து விக்கல் ஏற்பட்டுக்கொண்டே இருக்க, முதலில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குடலிலிருந்து அமிலம் தொண்டைக்குள் ஏறுவதால் அந்த பிரச்சினை இருக்கும் என்று கூறிவிட்டார்கள்.

பின்னர் இரவு தூக்கத்திலும் விக்கல் தொடர்ந்து, தூங்க முடியாத ஒரு நிலை ஏற்படவே, மருத்துவர்கள் அவரை ஒரு காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் அனுப்ப, அவர் ஒரு ஸ்கேன் செய்ய சொல்லியிருக்கிறார்.

ஸ்கேன் எடுத்த Lucyக்கு, அவரது மூளையில் எலுமிச்சம் பழம் அளவிற்கு ஒரு புற்றுநோய்க் கட்டி இருப்பது தெரியவர அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றிய பின்னரும் அந்த கட்டி மீண்டும் உருவாகியிருக்கிறது.

அதற்கு பிறகு Lucyக்கு பக்க வாதம்வேறு ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அவரது மூளையில் பத்து அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

விக்கல் என்று நினைத்தது இந்த அளவுக்கு கொண்டு விடுமா என ஆச்சரியப்படும் Lucy, தற்போது தன்னைப்போல் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதையாவது செய்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்