ஈரானில் ட்ரோன் பறக்கவிட்ட பிரித்தானிய இளம்பெண்: பெண்களை காவலர்களே சீரழிக்கும் பயங்கர சிறையில் அடைப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஈரான் தலைநகர் அருகே ட்ரோன் பறக்கவிட்ட பிரித்தானிய இளம்பெண்ணும் அவரது காதலரும் அடைக்கப்பட்டுள்ள சிறை குறித்த குலைநடுங்கச் செய்யும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியரான Jolie King தனது அவுஸ்திரேலிய காதலரான Mark Firkin என்பவருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகில், ட்ரோன் ஒன்றை பறக்க விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இந்நிலையில், அவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் Evin சிறை குறித்து குலைநடுங்கச் செய்யும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையத்தில் செய்தி வெளியிடுபவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் என கற்றோர் அதிகம் அடைக்கப்பட்டுள்ள Evin சிறை, Evin பல்கலைக்கழகம் என்ற பட்டப்பெயருடனேயே அழைக்கப்பட்டுவருகிறதாம்.

அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் எவரும் தள்ளப்படும் Evin சிறையிலிருந்து இதுவரை ஒருவர் கூட தப்பியதில்லையாம்.

இன்னமும் சிறை வளாகத்திலேயே கைதிகள் தூக்கிலிடப்படும் Evin சிறை, உலகிலேயே மோசமான சிறை என்று அழைக்கப்படுகிறது.

சிறையில் தனியறையில் அடைக்கப்பட்டு தனிமையில் வாடும் பலரும், மன நலம் பாதிக்கப்பட்டு தங்கள் தலையை சுவற்றில் மோதிக் கொள்வதும், சித்திரவதை தாங்காமல் பலர் தற்கொலை செய்வதும் சகஜம் என்கிறார்கள் அதிர்ஷ்டவசமாக விடுவிக்கப்பட்ட முன்னாள் கைதிகள் சிலர்.

Credit: Alamy

பல பெண் கைதிகள் விசாரணையின்போது சித்திரவதை செய்யப்படுவதற்காக, பாலியல் வன்புணர்வு ஒரு ஆயுதமாக இன்னமும் பயன்படுத்தப்படுவதை நடுக்கத்துடன் நினைவுகூறுகிறார்கள்.

ஈரான் அரசை விமர்சித்ததற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட Farzad Madadzadeh, ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தான் அடித்து உதைக்கப்பட்டதோடு, மின்சார ஷாக் கொடுக்கப்பட்டு தனிமை அறையில் தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கிறார்.

16 வயது இருக்கும்போது அரசுக்கு எதிரான பேரணி ஒன்றில் கலந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட Marina Nemat, மீண்டும் மீண்டும் தான் வன்புணர்வுக்குள்ளாக்கப்படதாக நடுக்கத்துடன் தெரிவிக்கிறார்.

Credit: AFP or licensors

17 வயது முதல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட தான் வெளியில் வரும்போது வேறு நபராக உணர்ந்ததாக தெரிவிக்கும் சிலரில் ஒருவரான Marina, Evin சிறையைப் பொருத்தவரை, தண்டிப்பதற்காக செய்யப்படும் வன்புணர்வு சட்டப்பூர்வமானது என்பதால் யாரும் அதைக்குறித்து புகாரளிக்கக்கூட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கழிவறை வசதி சரியாக இல்லாததால் குவிந்து கிடக்கும் மலமும், அதனால் பாதிக்கப்படும் குடிநீரும், கொஞ்சமே வழங்கப்படும் உணவும் என Evin சிறை ஒரு நரகம் என்கிறார்கள் முன்னாள் கைதிகள்.

இதற்கிடையில், அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு ஈரானிய கைதியை விடுவிப்பதற்காக, பிணையக்கைதியாகவே Jolieயை ஈரான் பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Negar Ghodskani (40) என்னும் அந்த ஈரானிய பெண் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Credit: AFP or licensors
Credit: Rex Features
Credit: AP:Associated Press
Credit: Getty - Contributor
Credit: Getty - Contributor

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...