மூன்று ஆண்டுகளாக விவாதிப்பதை தவிர அரசியல்வாதிகள் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை: வெளுத்து வாங்கிய பிரித்தானியர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அரசியல்வாதிகள் உட்பட பலர் கலந்து கொண்ட கேள்வி நேரம் என்ற நிகழ்ச்சியின்போது பேசிய பிரித்தானியர் ஒருவர், அரசியல்வாதிகளை வெளுத்து வாங்கினார்.

அதோடு விடவில்லை Charlie Neil என்னும் அந்த குடிமகன், மன அழுத்தத்தை ஏற்படுத்தியதற்காக David Cameron மீது வழக்கு தொடர முடியுமா என்றும் ஒரு போடு போட்டார் அவர்.

பிரெக்சிட் குறித்து அவர் உண்மையாகவே என்ன நினைக்கிறார் என்று கூற முடியுமா என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் கேட்க, நேர்மையான ஒரு பதிலை சுடச்சுட கொடுத்தார் அவர்.

மொத்தமும் ஒரு கெட்ட கனவு போல் இருக்கிறது என்று கூறிய Charlie, நான் களைத்துப்போனேன், உங்களுக்கு மூன்று ஆண்டுகளும் மூன்று மாதங்களும் கொடுக்கப்பட்டன, ஆனால் நீங்கள் உங்களுக்குள் சிறு பிள்ளைகள் போல் விவாதித்துக்கொண்டீர்களேயொழிய, உருப்படியாக எதையும் செய்யவில்லை என்றார்.

உங்களுக்கு ஒருவர் மீது ஒருவருக்கும் மரியாதையில்லை, பிரித்தானிய மக்கள் மீதும் மரியாதையிலை என்றார் Charlie.

அவரது பதிலைக் கேட்ட பார்வையாளர்கள் கரவொலி எழுப்ப, அரசியல்வாதிகளுக்கு முகம் சிவந்து போனது.

அத்துடன் சமூக ஊடகங்களிலும் Charlieயின் கருத்துக்கு பலத்த வரவேற்பு, நம் எல்லோர் சார்பிலும்தான் Charlie பேசுகிறார் என்று நான் நினைக்கிறேன் என்கிறார் ஒரு பயனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers