புற்றுநோய்க்கு இரையான தந்தை.... மகள் செய்த நெகிழ்ச்சி செயல்: வெளிநாட்டில் இருந்து வந்த மகிழ்ச்சி செய்தி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் தந்தையின் நினைவு நாளன்று சிறு குறிப்புடன் இளம் பெண் அனுப்பிய பலூன் 1,700 கிலோ மீற்றர் தொலைவில் சென்று நெகிழ்ச்சி செய்தியை கொண்டுவந்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியை சேர்ந்த நிக்கோலா பவுலர் என்ற இளம் பெண்ணே கடந்த செப்டம்பரில் தமது தந்தையின் நினைவாக பலூன் ஒன்றை பறக்க விட்டுள்ளார்.

செவிலியராக பணியாற்றும் இவர், சம்பவத்தன்று, தமது கணவருடன் கல்லறைத் தோட்டத்திற்கு சென்று நினைவு நாளை அனுசரித்துவிட்டு,

பலூன் ஒன்றை, அவரது மொபைல் எண்ணுடன் பதிவு செய்து பறக்க விட்டுள்ளார்.

அந்த பலூனானது 1,700 கி.மீ தொலைவில் வடக்கு போலந்து நாட்டில் உள்ள Troszkowo கிராமத்தில் Radoslaw Gach என்ற விவசாயியின் கைகளில் சிக்கியுள்ளது.

அவர் அந்த பலூனில் எழுதப்பட்டிருந்த வாசகங்களில் மனமுருகி, உடனையே அந்த பலூனில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு தகவல் அனுப்பியுள்ளார்.

அந்த பலூனில் பதியப்பட்டிருந்த வாசகங்கள், தமது அழுகையையும் ஒருசேர மகிழ்ச்சியையும் தந்தது என அந்த விவசாயி குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, குறித்த பலூனுடன் தமது மகளையும் அழைத்து புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்து அதை நிக்கோலாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த தகவலை பார்த்த பின்னர் தான், நிக்கோலா தான் அனுப்பிய பலூனானது 1,700 கிலோ மீற்றர் தொலைவுக்கு பறந்து சென்றுள்ளதை அவர் அறிந்துள்ளார்.

மட்டுமின்றி, நிக்கோலாவின் தந்தை வடக்கு போலந்தில் உள்ள அந்த கிராமத்திற்கு முன்னர் ஒருமுறை சென்றிருந்ததாகவும், அந்த விவசாயி குறிப்பிட்டிருந்தது நிக்கோலாவுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமது தந்தை சொந்த கிராமத்தில் இருந்து தனது வாழ்நாளில் எவ்வளவு தொலைவு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதை அறியவே தாம் இந்த பலூனை பறக்க விட்டதாக நிக்கோலா தெரிவித்துள்ளார்.

நிக்கோலாவின் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு தமது 68-வது வயதில் மரணமடைந்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers