பிரித்தானிய இளம்பெண் வீட்டில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் : அவர்கள் யார் என தெரியவந்தபோது...

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளம்பெண் ஒருவர் வீட்டில் திருடுவதற்காக நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் யார் என்பதை அவர் கண்டுபிடித்ததையடுத்து, அந்த பெண்ணை கொலை செய்து தப்பினார்கள் அவர்கள்.

பிரித்தானியரான Janice Farman(47), ஸ்காட்லாந்தைவிட்டு மொரிஷியஸ் தீவில் வந்து வசித்துள்ளார்.

ஒரு நாள் முகமூடியணிந்த கொள்ளையர்கள் மூவர் அவரது வீட்டுக்குள் வந்து கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார்கள். அப்போது கொள்ளையர்களில் ஒருவரை உற்று கவனித்த Janiceக்கு, அது தன்னுடன் முன்பு பணியாற்றிய ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

தங்களை Janice அடையாளம் தெரிந்து கொண்டுவிட்டார் என்பது புரியவும், சிக்கிக்கொள்வோம் என பயந்து அவரை கொன்றுவிடுவதென முடிவு செய்துள்ளார்கள் அந்த கொள்ளையர்கள்.

Kamlesh Mansingh (27) என்பவர் Janiceஐ கழுத்தை கயிற்றால் நெரித்துக் கொல்ல, அவருடன் வந்த Ravish Rao Fakhoo (27) மற்றும் Anish Soneea (20) ஆகிய இருவரும் அவரை கொல்ல Mansinghக்கு உதவியிருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் எதிர்பாராத ஒன்று நடந்திருக்கிறது... அது என்ன வென்றால், Janiceஇன் பத்து வயது மகனான Gavin அப்போது குளியலறைக்குள் இருந்து நடந்ததைக் கவனித்திருக்கிறான்.

கொள்ளையர்கள் கொள்ளையடித்துவிட்டு Janiceஇன் பணம், கார் உட்பட பல பொருட்களுடன் தப்பிச் செல்ல, Gavin தனது தாயின் தோழி ஒருவருக்கு போன் செய்து, தனது வீட்டுக்குள் முகமூடி அணிந்த மூவர் வந்ததாகவும், தன் தாய் வாயில் இரத்தம் வழிய கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

விசாரணையில் Janice வீட்டுக்கு கொள்ளையடிக்க வந்தவர்கள் முன்பு அவருடன் அலுவலகம் ஒன்றில் பணி செய்தவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர் Janice அந்த அலுவலகத்திலிருந்து பிரிந்து சென்று வேறு ஒரு இடத்தில் பணிக்கு சேர்ந்திருக்கிறார்.

பின்னொரு நாளில், மீண்டும் Janiceஐ அவர்கள் சந்திக்க, நட்பாக பழகியிருக்கிறார்கள் அனைவரும்.

இதற்கிடையில் பணப்பிரச்னையால் தவித்த Mansinghக்கு Janiceஐ சந்தித்ததும் ஒரு திட்டம் தோன்றியிருக்கிறது.

அது Janice வீட்டில் கொள்ளையடிக்கலாம் என்பதுதான். அப்படி கொள்ளையடிக்க முகமூடி அணிந்து வரும்போதுதான், அவர்களில் ஒருவரை Janice அடையாளம் கண்டு கொண்டுள்ளார்.

சிக்கிக்கொள்வோம் என்று பயந்து Janiceஐ கொலை செய்திருக்கிறார்கள் மூவரும். கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், மூவரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

வழக்கின் தீர்ப்பு பின்னொரு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்