விமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

மதுபோதையில், பொலிஸாரை அவதூறாக பேசி, மோசமாக நடந்துகொண்ட இளம்பெண் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடன கலைஞரான டயானா ஆண்ட்ரியாஸ் ரிவேரா (33) ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து சொந்த நாட்டிற்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தார்.

அந்த சமயத்தில் மதுபோதையில் இருந்த டயானா, தன்னுடைய பாஸ்போர்ட்டை வைத்திருந்த இடத்தை மறந்துவிட்டார். இதனையடுத்து விமானத்தில் ஏறுவதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

உடனே ஆத்திரமடைந்த டயானா, அங்கிருந்தவர்களை அவதூறாக பேச ஆரம்பித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட, விமான நிலைய பொலிஸார், வாகனத்தில் ஏற்ற முயற்சித்துள்ளனர்.

கையில் கத்தியுடன் நின்றுகொண்டிருந்த டயானா, ஒரு பொலிஸாரின் இடுப்பில் எட்டி உதைத்து, நகத்தால் அவருடைய முகத்தில் கீறியுள்ளார். அதேபோல மற்றொரு பொலிஸாரையும் மர்ம இடத்தில் தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட டயானா, உடல்நிலை சரியில்லாததால் வீடியோ மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது வழக்கினை கேட்டறிந்த நீதிபதி செவ்வாய்க்கிழமையன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

அதேசமயம் மதுபோதையில் இருந்த டயானா கையில் கத்தி இருப்பதை மறந்துவிட்டதால், அதனை வைத்து யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers