மரணப்படுக்கையில் 5 வயது சிறுமி... பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்: எழுந்த விமர்சனம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் உயிர் காக்கும் கருவிகளுடன் மரணப்படுக்கையில் இருக்கும் 5 வயது சிறுமி தொடர்பில் நீதிமன்றத்தில் பெற்றோர் தெரிவித்த கருத்துகள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூளையில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு காரணமாக ரோயல் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் 5 வயதான Tafida Raqeeb.

தற்போது அவருக்கு சிகிச்சை அளிப்பது வீண் என குறிப்பிட்டுள்ள ரோயல் லண்டன் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள்,

அவரது உயிர் காக்கும் கருவிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள Tafida Raqeeb-ன் பெற்றோர்கள்,

தங்கள் பிள்ளையை இத்தாலியில் சிகிச்சை அளிக்க விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

மட்டுமின்றி தங்கள் மத நம்பிக்கையின்படி, உயிர் காக்கும் கருவிகளை அகற்றுவதும், மரணத்திற்கு கையளிப்பதும் பாவம் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுமி தபீதா மூளைச் சாவு ஏற்படும் வரை அவருக்கான சிகிச்சை தொடர வேண்டும் எனவும் பெற்றோரான Shelina Begum(39), மற்றும் Mohammed Raqeeb(45) ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது, தமது பிள்ளையின் வெளிநாட்டு சிகிச்சைக்காக உதவ வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மன்றத்தை அணுகியுள்ளனர் பெற்றோர்.

பிரித்தானியா சிறார்களை ஒருபோதும் மதித்ததில்லை என குற்றச்சாட்டும் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய சூழலில் தமது சிகிச்சைக்காக எந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற முடிவை தாமாகவே எடுக்கும் வயதில் அவர் இல்லை எனவும், அதனால் பெற்றோரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க வேண்டும் எனவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன், குறித்த சிறுமி சில ஆண்டுகள் வரை உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக சிரப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers