இணையத்தில் வைரலான டயானாவின் ஆபாச புகைப்படம்... கோபமடைந்த இளவரசர் வில்லியம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பள்ளி பருவத்தில் மறைந்த இளவரசி டயானாவின் ஆபாச புகைப்படம் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்பத்தியதால், அவமானத்தில் இளவரசர் வில்லியம் கடும் கோபமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

1996 ஆம் ஆண்டில் இளவரசி டயானா வெளியிட்ட மேலாடை படங்கள் குறித்து இளவரசர் வில்லியம் எப்படி வகுப்பு தோழர்களால் கொடூரமாக கிண்டல் செய்யப்பட்டார் என்பதை கான்டே நாஸ்டின் தலைவர் நிக்கோலஸ் கோலிரிட்ஜ் வெளிப்படுத்தியுள்ளார்.

வோக் ஹவுஸில் மதிய உணவு நேரத்தில் டயானாவை சந்தித்த நிக்கோலாஸிடம், 'நிக்கோலஸ், நான் உங்களிடம் ஏதாவது கேட்கலாமா? தயவு செய்து உண்மையை கூறுங்கள்... டெய்லி மிரரில் எனது மேலாடை இல்லாத புகைப்படத்தைப் பார்த்தீர்களா? என இளவரசி கேட்டுள்ளார்.

மேலும், அந்த புகைப்படத்தால் என்னுடைய மகன் வில்லியம் (14) மன வேதனையடைந்துள்ளான். பள்ளியில் அனைத்து மாணவர்களும் அவனை கிண்டல் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இதேபோல இளவரசர் வில்லியம் 2017 ஆம் ஆண்டில் தனது மனைவி கேட் மிடில்டனின் மேலாடை புகைப்படங்களுக்கு 1.3 மில்லியன் டாலர் இழப்பீடு கோரினார். அவை 2012 இல் பிரெஞ்சு க்ளோசர் இதழில் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்