மலச்சிக்கலால் அவதிப்பட்ட 2 வயது பிரித்தானிய சிறுமி... கருப்பையை நீக்கிய மருத்துவர்கள்: நெஞ்சைப் பிசையும் சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் சிறுநீரக புற்றுநோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்த 2 வயது சிறுமியின் கருப்பையை அறுவைசிகிச்சையால் மருத்துவர்கள் நீக்கம் செய்துள்ளனர்.

நீக்கப்பட்ட கருப்பையானது மருத்துவ முறைப்படி பாதுகாக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் அவர் குடும்ப வாழ்க்கையில் இணைந்தால் இந்த கருப்பையானது பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் Swindon பகுதியில் குடியிருந்துவருபவர் 28 வயதான மேகன் எட்வார்ட்ஸ். இவரது 2 வயது மகளின் கருப்பையே தற்போது நீக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மலச்சிக்கல் காரணமாக கடுமையாக அவதிப்பட்டு வந்த தமது மகள் Esme Todd-ஐ மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், சிறுமி எஸ்மிக்கு ஒருவகையான சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனாலையே சிறுமி எஸ்மி மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்துள்ளார். ஆனால் புற்றுநோய் தொடர்பில் சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதால் அவர் பிள்ளை பெற்றுக்கொள்ளும் தகுதியை இழக்க நேரிடும் எனவும் மருத்துவர்கள் தாயார் மேகனை எச்சரித்துள்ளனர்.

தமது மகளுக்கு சிறுநீரக புற்றுநோய் பதிப்பு இருப்பதை முதன் முறையாக அறிந்த தருணம் தமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது என கூறும் மேகன்,

அடுத்து அவருக்கு அளிக்க இருக்கும் சிகிச்சையால் என்ன பதிப்பு ஏற்படும் என்பதை மருத்துவர்கள் விளக்கியபோது உண்மையில் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றார்.

அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் அவரால் தாமாகவே இனி பிள்ளை பெறும் தகுதியை இழப்பார் என கேட்டபோது கண்கள் குளமானது என்றார்.

ஆனால், எதிர்காலத்தில் அறுவைசிகிச்சை மூலம் அவர் மீண்டும் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர் என்றார் மேகன்.

இதுவரை பிரித்தானியாவில் 2 வயதான பிள்ளைக்கு இதுபோன்ற கருப்பை நீக்கம் செய்யும் அறுவைசிகிச்சையானது நடத்தப்படவில்லை எனவும்,

அவரது எதிர்காலம் கருத்தில் கொண்டே தற்போது இந்த சிகிச்சை முன்னெடுக்கப்படுவதாகவும் மேகன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நடந்த அறுவைசிகிச்சையில், சிறுமி எஸ்மியின் சிறுநீரக புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், அதேவேளை அவரது ஒரு கருப்பையும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அறுவைசிகிச்சைக்கு தாமதித்தால் சமயங்களில் சிறுநீரக புற்றுநோயானது அவரது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்