கழிப்பறையில் பிரசவ வலியால் துடித்த மனைவி! ரியல் ஹீரோவாக மாறி கணவன் செய்த செயல்... குவியும் பாராட்டு

Report Print Raju Raju in பிரித்தானியா

மனைவி வீட்டு கழிப்பறைக்கு பிரசவ வலியால் துடித்த நிலையில் ரியல் ஹிரோவாக செயல்பட்ட கணவன் பனிக்குடப்பையில் இருந்து குழந்தையை எடுத்து தைரியமாக பிரசவிக்க வைத்துள்ளார்.

அயர்லாந்தின் Belfast நகரை சேர்ந்தவர் டேவிட் ஹாமில்டன். இவர் மனைவி லவுரா.

லவுரா கர்ப்பமாக இருந்த நிலையில் இன்னும் பத்து நாட்களில் பிரசவிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் லவுரா இருந்த போது அவருக்கு உடல்நிலையில் அசெளகரியம் ஏற்பட்டது.

பின்னர் வயிறு வலித்த நிலையில் கழிப்பறைக்கு சென்றார்.

இதையடுத்து கணவனை கத்தியபடி அழைத்த லவுரா, குழந்தை தனக்கு இப்போதே பிறந்துவிடும் என நினைப்பதாக பயத்துடன் கூறினார்.

ஆனால் பதட்டபடாத கணவன் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு போன் செய்தார்.

அந்த சமயத்தில் லவுராவின் பனிக்குடப்பை உடைய தொடங்கிய நிலையில் அதிலிருந்து பெண் குழந்தையை டேவிட் லாவகமாக வெளியில் எடுத்தார்.

குழந்தை ஆரோக்கியமாக இருந்த நிலையில் பின்னர் தாயும் சேயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

இது குறித்து டேவிட் கூறுகையில், குழந்தை பெறும் போது எப்படி பதட்டப்படாமல் சூழலை கையாள்வது என்பது குறித்த பயிற்சியை நானும் என் மனைவியும் எடுத்துள்ளோம்.

அதனால் தான் அந்த பரபரப்பான அந்த சூழலையும் அமைதியாக கையாண்டோம், என்னுடய செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...