பிரித்தானியாவில் நாய்..பூனை இறைச்சி சாப்பிடுவதற்கு தடை... கொந்தளிக்கும் நீதி அமைச்சகம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிடுவதற்கான புதிய தடையை நீதி அமைச்சகத்தின் அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

இந்த தடை far east நாடுகளின் கலாச்சாரத்தை புண்படுத்தும் என்ற அச்சத்தில் தடுக்கப்பட்டதாக நீதி அமைச்சகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் நாய் மற்றும் பூனை இறைச்சி சாப்பிடுவதற்கு ஒரு புதிய தடை சட்டத்தை பிரித்தானியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் உருவாக்கினார்.

முன்னாள்DEFRA Secretary Michael Gove, பிரித்தானியாவில் இந்த பழக்கம் நடைமுறையில் அரிதாக இருந்தபோதிலும் கோடையில் இந்த தடை நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

நாய் மற்றும் பூனைகளை உண்ணும் பழக்கம் பரவலாக இருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இது ஒரு அழுத்தமான செய்தியை வெளிபடுத்தும் என்று நாய் ஆர்வலர் குழுக்கள் அவரை வற்புறுத்தின.

ஆயினும்கூட, அரசு ஊழியர்கள் இந்த நடவடிக்கையை நிறுத்த இப்போது இறங்கியுள்ளனர், இந்த சட்டத்தின் மூலம் மற்ற நாடுகளுக்கு அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று ஆணையிடுவது அரசாங்கம் கலாச்சார ரீதியாக புண்படுத்தும் வகையில் இருக்கும் என நீதி அமைச்சகத்தால் கூறப்பட்டது.

நாய்கள் எங்கள் துணை விலங்குகள். நாங்கள் அவற்றை சாப்பிடுவதில்லை, இது உலகின் பிற பகுதிகளுக்கு அனுப்ப வேண்டிய மிக முக்கியமான செய்தி என கன்சர்வேடிவ் எம்.பி. Giles Watling கூறினார்.

மேலும், இது கலாச்சார ரீதியாக புண்படுத்துவது அல்ல, ஏனென்றால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் சொல்லவில்லை. நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவர்களிடம் சொல்கிறோம்.

நாங்கள் அதைப் பற்றி கவலைப்படக்கூடாது, எனவே, நீதி அமைச்சகத்தின் ஆட்சேபனை எனக்கு ஆச்சரியமாக இருந்தது என கூறினார்.

நீதி அமைச்சகத்தின் அதிகாரிகள், சட்டத்தை அமல்படுத்துவது கடினம் என்றும், நாய் மற்றும் பூனை இறைச்சியை கொண்டு செல்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் தற்போதுள்ள தடை போதுமானது என்றும் வாதிட்டனர்.

ஜேர்மனி, ஆஸ்திரியா, தைவான், தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் ஹாங்காங்கில் நாய் சாப்பிடுவது ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.

சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் மற்றும் கம்போடியா முழுவதும் ஆண்டுக்கு 30 மில்லியன் நாய்கள் சாப்பிடப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலானவை தெருவில் இருந்து திருடப்படுகின்றன. அவற்றின் இறைச்சி இது ஒரு சுவையாகவும் சுகாதார மருந்தாகவும் கருதப்படுகிறது.

உலக நாய் அமைப்பு, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நாய்களை சாப்பிடுவது தொடர்பான எந்தவொரு செயலுக்கும் முழு தடை விதிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டது.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மந்திரி Sir Alan Duncan உட்பட பல எம்.பி.க்கள் இதை ஒரு அருவருப்பான பழக்கம் என்று விமர்சித்தனர்.

நீதி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: தற்போது உலகின் வலுவான விலங்கு நலச் சட்டங்களில் சில பிரித்தானியாவில் உள்ளன. ஏதேனும் மாற்றங்கள் தேவையா என்பதை அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருகிறது, மேலும் எந்தவொரு திட்டத்தையும் உரிய நேரத்தில் அமைக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்