அபுபக்கர் தலைக்கு 19 மில்லியன் பவுண்ட் பரிசு..! பிரித்தானியா அதிகாரி அறிவிப்பு

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதியின் தலைக்கு, 19 மில்லியன் பவுண்ட் பரிசுத்தொகை அறிவித்து பிரித்தானியாவின் மூத்த இராணுவ அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தங்களை கலிபேட் (மத ரீதியில் ஆட்சி புரியும் வாரிசாக) என பிரகடனம் செய்து, ஒரு கோடி மக்கள் மீது தங்களின் ஆட்சியை திணித்த ஐஎஸ்ஐஎஸ் ஜிகாதி குழுவானது, 2014ம் ஆண்டு சிரியாவிலும், ஈராக்கிலும் பெரும் பகுதியை கைப்பற்றியிருந்தது. அந்த சமயத்தில் தங்களுடைய தலைவராக அபுபக்கர் அல் பாக்தாதியை அறிவித்தது.

ஆனால் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் தோல்விகளால், 2019ம் ஆண்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை இழந்தது. இதனையடுத்து அபுபக்கர் அல் பாக்தாதியும் தலைமறைவானான்.

தொடர்ந்து அவனை தேடும் பணியில் இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள அபுபக்கர் அல் பாக்தாதியின் தலைக்கு 19 மில்லியன் பவுண்ட் பரிசுத்தொகை அறிவித்து பிரித்தானியாவின் மூத்த இராணுவ அதிகாரி ஜெனரல் கிறிஸ்டோபர் கிகா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பகுதியில் இருந்து 18 மாதங்களுக்கு பின்னர் நாடு திரும்பியிருக்கும் அவர், அபுபக்கர் அல் பாக்தாதிக்கு நாட்கள் இன்னும் குறைவு என்று நான் நினைக்கிறேன். தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் நிச்சயம் அவர் பிடிபடுவார் அல்லது கொல்லப்படுவார் என்று நான் நம்புகிறேன்.

எங்களுடைய கூட்டணி, ஐ.எஸ்.ஐ.எஸ் தலைமையை 'மிக நெருக்கமான கண்காணிப்பின் கீழ்' கொண்டுவந்துள்ளது. 'அவர்களில் ஏராளமானவர்களைக் கொல்வதிலோ அல்லது கைப்பற்றுவதிலோ நியாயமான முறையில் வெற்றி பெற்றுள்ளது' எனக்கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்