லண்டனில் பேருந்தில் சென்ற இஸ்லாமிய பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை... வெளியான வீடியோவின் பின்னணி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் முஸ்லிம் பெண்ணிடம் ஒரு வித மோசமான நற்றம் வருவதாக, இந்திய பயணி ஒருவர் கூறியதால், அவர் ஆத்திரத்தில் அவருடன் சண்டை போட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் கடந்த சனிகிழமை 195- எண் கொண்ட பேருந்து Romney சாலை வழியாக சென்ற போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், குறித்த பெண் பயணி, இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர், அவர் அந்த பேருந்தில் சென்ற போது இனவெறி தாக்குதல் நடந்துள்ளது.

அதாவது, அந்த பேருந்தில் இருந்த இந்தியாவைச் சேர்ந்த பயணி ஒருவர், அந்த பெண்ணிடம் இருந்து ஒரு வித கெட்ட நாற்றம்(கறி நாற்றம்) வருகிறது என்று கூறியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் பேருந்தில் பலர் இருக்கும் போது வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers