பிரபல கால் பந்து வீரரின் பிரேத பரிசோதனை காட்சியை மீண்டும் மீண்டும் பார்த்த பெண்ணுக்கு சிறை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரபல கால் பந்து வீரரான Emiliano Salaவின் பிரேத பரிசோதனை காட்சியை மீண்டும் மீண்டும் பார்த்த CCTV நிறுவன இயக்குநராகிய ஒரு பெண்ணும், அவரது சக ஊழியர் ஒருவரும் சிறைக்கு செல்ல இருக்கிறார்கள்.

Emiliano Sala (28), கால் பந்து போட்டி ஒன்றிற்காக விமானத்தில் செல்லும்போது, அவர் பயணித்த விமானம் ஆங்கிலக் கால்வாயில் விழுந்து நொறுங்கியதில் அவர் உயிரிழந்தார்.

அவரது உடல் பிப்ரவரி மாதம் 6ஆம் திகதி மீட்கப்பட்டு, Bournemouthஇலுள்ள ஒரு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த காட்சிகளை CCTV நிறுவன இயக்குநராகிய Sherry Bray (49) என்ற பெண்ணும் அவரது சக ஊழியரான Christopher Ashford (62) என்பவரும் சட்ட விரோதமாக மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார்கள்.

அத்துடன் பிரேத பரிசோதனையில் ஒரு காட்சியை தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ள Sherry, அதை தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் அனுப்ப, அந்த படம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதையறிந்த Sherry, அந்த கோப்புகளை தனது மொபைலிலிருந்து நீக்கியதோடு, Christopherஐயும் நீக்கச் சொல்லியிருக்கிறார்.

இறந்த உடல்களை அனுமதியின்றி அணுகுதல் வெளிநாடுகளில் மிகப்பெரிய குற்றம் என்பதால், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் Christopherஐ தனது மொபைலிலிருந்து கோப்புகளை அகற்றச் சொன்னது, வழக்கில் முக்கிய தவறு என்பதால் அதற்கும் சேர்த்து Sherryக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்