வில்லியம் - கேட் தம்பதியின் மகனை முந்தி அசத்திய குட்டி இளவரசர் ஆர்ச்சி! எதில் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் தம்பதியின் குழந்தையான குட்டி இளவரசர் Archie முதல் அரசுமுறை பயணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லவுள்ளார்.

இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் தம்பதிக்கு கடந்த மே மாதம் 6ஆம் திகதி அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் அதற்கு Archie Harrison Mountbatten-Windsor என பெயர் வைக்கப்பட்டது.

இந்நிலையில் Archie தற்போது நான்கு மாதம் குழந்தையாக உள்ள நிலையில் பெற்றோருடன் முதல் அரசுமுறை பயணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லவுள்ளார்.

இதன் மூலம் அரசகுடும்பத்திலிருந்து அதிகாரபூர்வ அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் மிக இளைய வயதுடையவர்களில் ஒருவர் என்ற பெருமை குழந்தை Archie-க்கு கிடைத்துள்ளது.

மேலும், வில்லியம் - கேட் தம்பதியின் மகனான குட்டி இளவரசர் ஜார்ஜ் கடந்த 2014-ல் ஒன்பது மாத குழந்தையாக இருக்கும் போது தான் பெற்றோருடன் முதல் அரசு முறை பயணமாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சென்றான்.

இந்த விடயத்திலும் Archie, ஜார்ஜை முந்தியுள்ளான்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers