சுற்றுலா சென்ற பெண்ணுக்கு 19000 அடி உயரத்தில் வழிகாட்டி மீது மலர்ந்த காதல்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த 34 வயதான டேனியல் கியூயோ என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ஐந்து வருட காதலனை பிரிந்து, குழந்தைகளுடன் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இவர் கடந்த ஆண்டு தன்னுடைய தந்தையுடன் தான்சானியாவில் உள்ள உலகின் இரண்டாவது மிக உயரமான மலையான கிளிமஞ்சாரோ நோக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்.

அப்போது முதன்முதலாக 27 வயதான ஆல்பரை சந்தித்துள்ளார். ஆல்பர் அங்கு வழிகாட்டியாக பணிபுரிந்து வந்தார். அவரை முதல் முறை பார்த்த போது காதலி இல்லை என்பதை அறிந்துகொண்ட டேனியல், காதல் வலையில் விழுந்துள்ளார்.

ஆல்பர் பல இடங்களில் டேனியலுக்கு தொடர்ந்து உதவி வந்துள்ளார். இதனால் அவர் மீது இன்னும் காதல் அதிகரித்துள்ளது.

அதன்பிறகு வீடு திரும்பியதும் டேனியல் தன்னுடைய காதலை ஆல்பரிடம் கூறியுள்ளார். அதனை ஆல்பரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து, மீண்டும் மூன்றாவது முறையாக தான்சானியாவிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு பொலிஸாரின் உரிய அனுமதி பெற்று 12 பேர் முன் திருமணம் செய்துகொண்டுள்ளார். அதன்பிறகு வீடு திரும்பிய டேனியலை பார்த்து அவருடைய தந்தை பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கடும் கோபத்தில் இருந்த அவர் மூன்று நாட்கள் பேசாமல் இருந்துள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து மகளின் நிலையை புரிந்துகொண்டு பேச ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள டேனியல், எனது முதல் திருமணம் முடிந்த பின்னர், இந்த வாழ்க்கையை பெறலாமா அல்லது வேண்டாமா என யோசித்தேன். இந்த வாழ்க்கை நன்றாக அமைந்தால் நல்லது. அப்படி இல்லையென்றால் பெரிதாக ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பதை புரிந்துகொண்ட பின்னர் தான் திருமணத்திற்கு ஆயத்தமானேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்