'மிகவும் வருத்தமாக இருக்கிறது'... இணையத்தில் உருகும் தாமஸ் குக் ஊழியர்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
345Shares

உலகின் பழமையான பிரித்தானியாவின் பயண நிறுவனமான தாமஸ் குக் திவாலாகிவிட்டதை அடுத்து, அதன் பணியாளர்கள் இணையதளத்தில் கவலையுடன் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

178 ஆண்டு பழமை வாய்ந்த பிரித்தானியாவின் பயண நிறுவனமான தாமஸ் குக் திவாலாகிவிட்டதாக இன்று அறிவிப்பு வெளியானது.

இதனால் உலகளவில் 21,000 ஊழியர்களில் 9,000 பிரித்தானியர்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு வேலை செய்த ஊழியர்கள் தங்களுடைய நிறுவனத்திற்கு கவலையுடன் நன்றி தெரிவித்து வருகின்றனர். அதில் பவுலா என்கிற ஊழியர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், உலகைப் பார்க்க அனுமதித்ததற்கு நன்றி. இந்த சீருடை அணிந்ததன் மூலமாக எனக்கு பெருமை சேர்த்ததற்கு நன்றி. மக்களின் விடுமுறை மகிழ்ச்சியில் என்னை கலந்துகொள்ள அனுமதித்ததற்கு நன்றி.

விலைமதிப்பற்ற நினைவுகளுக்கு நன்றி. நான் ஏற்கனவே என் சிறகுகளைத் தொங்கவிட்டிருந்தாலும், நீங்கள் என் வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாக இருக்கிறீர்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்